Advertisment
Presenting Partner
Desktop GIF

பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்: தனுஷ் - நயன்தாரா விவகாரத்தில் திடீர் திருப்பம்!

தனுஷ் குறித்து வாழு வாழவிடு என்று பதிவிட்டிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Dhanush Vuig

நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனுஷ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவை நீக்கியுள்ளார் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன்.

Advertisment

தமிழ் சினிமாவில், இயக்குனர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தயாரிப்பாளராக கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற படத்தை தனுஷ தயாரித்திருந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு தனுஷ் நயன்தாரா இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதேபோல், நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல்வயப்பட்ட விக்னேஷ் சிவன், படத்தின் பட்ஜெட்டை பன்மடங்கு உயர்த்திவிட்டதாகவும் இதனால் தனுஷ் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு ரூ10 கோடி உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து நயன்தாரா வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனுஷை கடுமையாக விமர்சித்த நிலையில், விக்னேஷ் சிவன், மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "வாழு, வாழ விடு - இவையெல்லாம் நம்பும் தீவிர ரசிகர்களுக்காக... மனிதர்கள் மற்றவர்களுக்காக மாற்றமடைவதற்கும், மற்றவர்களின் சந்தோஷத்தில் இருந்து மகிழ்ச்சியை பெறுவதற்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசுடன் தனுஷ் 'வாழு வாழவிடு’ என பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன் தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ளார். வீடியோவை நீக்கியதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vignesh Shivan Dhanush Nayanthanra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment