scorecardresearch

சிறந்த அம்மாக்களில் மாமியாரும் ஒருவர் : நயன் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து

இந்த ஆண்டு முதல் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்தராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்தார்

Vignesh
விக்னேஷ் சிவன் நயன்தாரா

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள அனையர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி தனது காதலர் இயக்குனர் விக்னெஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அனைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் அன்னையர் தினத்தை கொண்டாடிய நயன்தராவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன், ’ஒரு அன்னையாக உனக்கு நான் பத்துக்கு பத்து மதிப்பெண் கொடுப்பேன். அபரீதமான அன்பும் வலிமையும் உள்ள என் தங்கமே.. உனக்கு முதல் அன்னையர் தினம், எங்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. சிறந்த ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளை எங்களுக்கு அளித்த கடவுளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது மாமியார் (நயன்தாராவின் அம்மா) அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விக்னேஷ் சிவன் மாமியாரும் ஒரு சிறந்த அம்மாக்களில் ஒருவர். அவருக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள். தூய உள்ளம் கொண்ட அவருடன் நான் நிறைய நேரம் செலவு செய்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதன்பிறகு தனது அம்மாவான மீனா குமாரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன்,  ‘புர்ஜ் கலீபாவை விட உயரமான இந்த வாழ்க்கையை கொடுக்க எனது அம்மா எடுத்த அன்பும் முயற்சியும் மிக அதிகம், உலகின் மிகச்சிறந்த தாய் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil director vignesh shivan mothers day wishers to wife and mother