20 வகையான உணவு மெனு... ஒடிடி தளத்தில் லைவ்... நயன் - விக்கி திருமணத்தில் முக்கிய அம்சம்

Tamil Cinema Update : இன்று காலை இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்

Tamil Cinema Update : இன்று காலை இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்

author-image
WebDesk
New Update
20 வகையான உணவு மெனு... ஒடிடி தளத்தில் லைவ்... நயன் - விக்கி திருமணத்தில் முக்கிய அம்சம்

Nayantara Vignesh Shivan Wedding Live Streaming On Ott Platform : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன்  திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

Advertisment

இந்த திருமணத்திற்கு குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கு ட்ரெஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு வருபவர்கள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என்றும், அப்படியே மீறி கொண்டுவந்தாலும் உள்ளே வந்தவுடன் சேம்பர் வைத்து மொபைல் சிக்னல் ஆஃப் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விக்கி – நயன் திருமணத்திற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்.இந்த திருமணத்திற்கு ரஜினி,ஷாருக்கான உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் விருந்தில் என்னென்ன மெனு இருந்தது என்பது குறித்து தற்போது மெனு வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விருந்தின் மெனு ! இத்தனை வகைகளா?

1. பன்னீர் பட்டாணிக்கறி  2. பருப்புக் கறி 3.அவியல் 4.மோர்க் குழம்பு  4.மிக்கன் செட்டிநாடு கறி (வேகன் உணவு) 5. உருளைக் கார மசாலா 6.வாழைக்காய் வருவல்  7.சேனக்கிழங்கு வருவல் 8.சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு 9.காளான் மிளகு வறுவல் 10. கேரட் பீன்ஸ் பொரியல்  11. காய் பொரிச்சது  12. பொன்னி ரைஸ் 13.பலாப் பழ பிரியாணி 14. சாம்பார் சாதம் 15.தயிர் சாதம் 16. பூண்டு மிளகு ரசம் 17. தயிர் 18.பாதாம் அல்வா 19. இளநீர் பாயாசம் 20. கேரட் ஐஸ் கிரீம்

என மொத்தம் 20 வகையான உணவுகள் பரிமாறப்பட்டடுள்ளது. இந்த உணவு பட்டியல் அடங்கிய மெனு கார்டு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்

மேலும் ஹிந்தியில் கத்ரீனா கைப் விக்கி கவுஷல் (80 கோடி), மற்றும் ஆலியாபட் ரன்பீர் கபூர் (110)ஆகியோருக்கு பிறகு தமிழில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஒடிடி தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Nayanthara Vignesh Shivan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: