Advertisment

பிரின்ஸை அடிச்சுத் தூக்கிய சர்தார்: லேட்டஸ்ட் வசூல் நிலவரம் எவ்வளவு?

தீபாவளி தினத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், சிவகார்த்திகேயன் முதல் முறையாக தெலுங்கில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியானது.

author-image
WebDesk
New Update
பிரின்ஸை அடிச்சுத் தூக்கிய சர்தார்: லேட்டஸ்ட் வசூல் நிலவரம் எவ்வளவு?

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியான கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

ஆண்டு தோறும் பண்டிகை தினங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், சிவகார்த்திகேயன் முதல் முறையாக தெலுங்கில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியானது.

இதில் காதல் காமெடியை மையப்படுத்தி வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் முதல் நாளில் இருந்தே கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான முந்தைய படங்களான டாக்டர், டான் ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்த நிலையில், பிரின்ஸ் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

கலவையாக விமர்சனங்களை பெற்றாலும் பிரின்ஸ் படம் 4 நாட்களில் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கார்த்தி நடிப்பில் வெளியான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான சர்தார் படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டீவ் விமாசனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. முக்கியமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலில் உள்ள கெடுதல், அதை வைத்து செய்யும் அரசியல் என இன்றைய முக்கிய தேவைகளை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் படம் 4 நாட்களில் 47 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் சர்தார் 50 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிந்துவிட்டாலும் போட்டிக்கு எதுவும் படங்கள் இல்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் மேலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment