Advertisment

பூஜாவுக்கு மேடையில் நிஜ அல்வா கொடுத்த டி.ஜே பிளாக்: இதுக்குத்தான் இவ்ளோ பாட்டு போட்டீங்களா?!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜாவுக்கு டைமிங் பாடல் கொடுத்தே பிரபலமானவர் டி.ஜே.பிளாக்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DJ Black

சூப்பர் சிங்கர்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜாவுக்காக டி.ஜே.பிளாக் அனுப்பிய அல்வாவை வைத்து ரசிகர்கள் பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல் புதிய திறமையாளர்களை அடையாளம் காணும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. அதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலங்களாக வளர்ந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் பூஜா மற்றும் டி.ஜே.பிளாக். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜாவுக்கு டைமிங் பாடல் கொடுத்தே பிரபலமானவர் டி.ஜே.பிளாக். இதன் மூலம் இவர்கள் இருவருமே தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

டி.ஜே.வாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் தற்போது அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே பூஜாவுக்காக ஸ்பெஷலாக வேலை பார்த்த டி.ஜே.பிளாக்கை பூஜாவின் பெரியம்மா ஒரு முறை மேடையில் வைத்து ப்ராங் செய்த நிகழ்வு இணையத்தில் படு வைரலாக பரவியது. இதன் மூலம் தான் டி.ஜே.பிளாக் பிரபலமானார் என்றே சொல்லலாம்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பூஜாவுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தார் டி.ஜே.பிளாக் இதில் எனக்கு கொடுத்த அல்வாவை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பார்செல் தொடர்பான ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Super Singer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment