Advertisment

கோட் படத்தில் விஜயகாந்த் வருவாரா? பிரேமலதா வைத்த திடீர் செக்; சிக்கலில் வெங்கட் பிரபு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவத்தை ஏ,ஐ.டெக்னாலஜி மூலம் திரையில் கொண்டு வருவது குறித்து தன்னிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijayakanth Family

குடுமபத்துடன் நடிகர் விஜயகாந்த்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவத்தை ஏ.ஐ டெக்னாலஜி மூலம் திரைப்படத்தில் கொண்டு வர முறையான அனுமதி பெற வேண்டும் என்று, அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை அமைத்து அதில் வெற்றி கண்டவர் விஜயகாந்த். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்தோடு மட்டுமல்லாமல் பல புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் தான் நடிக்கும் படங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்தவர்.

அதேபோல் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், குறுகிய காலத்தில் அரசியலில், முன்னிலை பெற்று, எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். அவரது மரணம், தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் தற்போது இல்லை என்றாலும் அவரது உருவத்தை ஏ,ஐ.டெக்னாலஜி மூலம் உருவாக்கி திரைப்படத்தில் கொண்டுவர பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் மகன் நடித்து வரும் படைத்தலைவன் படத்திலும் விஜயகாந்த் வர உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது பிரேமலதா விஜயகாந்த் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ‘’தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். 

எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் (AU TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள். ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறியுள்ளார்.

கோட் படத்தில் விஜயகாந்தை கொண்டு வருவதற்காக 5-6 முறை இயக்குனர் வெங்கட் பிரபு அனுமதி கேட்டு தன்னை சந்தித்ததாகவும், விஜய் படம் என்பதால் தன்னால் அதை மறுக்க முடியாமல் அனுமதி கொடுத்துவிட்டேன் என்றும் பிரேமலதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது ஏ,ஐ. டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் உருவத்தை திரைப்படத்தில் கொண்டு வர தன்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ளது கோட் படத்திற்கு பாதிப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment