Advertisment

சீரியல் தம்பதிக்கு ஷாக் கொடுத்த பிரபல ஹீரோ… வெளியான வீடியோ அப்டேட்

Simbu makes surprise call to Poove Poochudava serial couple actors Madhan and Reshma Tamil News: சமீபத்தில் திருமணமான ரேஷ்மா – மதன் ஜோடிக்கு பிரபல நடிகர் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil entertainment news: Simbu surprise call to newly married Madhan and Reshma

Tamil entertainment news: ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடி. இந்த ஜோடி தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் சில சில நாட்களுக்கு முன்னர் தான் நடைபெற்றது.

Advertisment
publive-image

இந்த திருமண விழாவில் சின்னத்திரை பிரபலங்கள், ஜனனி அசோக் குமார், தனலட்சுமி சிவா, கதிர் VJ, அக்‌ஷயா கிம்மி, ஜெயஸ்ரீ, சஞ்சய் ராஜா, சோனா ஹைடன் மற்றும் சமீபத்தில் திருமணமான ஷபானா-ஆர்யன் ஜோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

publive-image
publive-image

தற்போது ரேஷ்மா – மதன் ஜோடியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

publive-image
publive-image

இந்நிலையில், ரேஷ்மா – மதன் ஜோடிக்கு நடிகர் சிம்பு வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த சிம்புவின் ரசிகர்களும் ரேஷ்மா – மதன் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

publive-image

ரேஷ்மா – மதன் ஜோடி 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அபி டைலர்’ சீரியலிலும் ஜோடியாக வலம் வருகின்றனர்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Serial Actress Tamil Cinema Simbu Zeetamil Serial Tamil Serial News Poove Poochudava Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment