அட, இது அல்லவா பாசம்: ஹன்சிகாவுக்காக சென்னை வாசி போல மாறிய கணவர்

ஹன்சிகா தான் வசித்து வந்த சென்னையை மிஸ் செய்வதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அட, இது அல்லவா பாசம்: ஹன்சிகாவுக்காக சென்னை வாசி போல மாறிய கணவர்

புதுமணத் தம்பதிகள் ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா, இம்மாதம் திருமணம் செய்ததை தொடர்ந்து, தங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில், ஹன்சிகா தான் வசித்து வந்த சென்னையை மிஸ் செய்வதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹன்சிகா மோத்வானிக்கும், சோஹேல் கதுரியாவுக்கும் இம்மாதம் 4ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்திலிருந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை, “இப்போது & எப்போதும்” என்று எழுதினார்.

எனவே அவரை உற்சாகப்படுத்த, அவரது கணவர் சென்னையை வீட்டிற்கு கொண்டு வருவதாக, சென்னையின் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தார். ஒரு வெள்ளை சட்டை, அதற்கு ஏற்ற வேஷ்டி மற்றும் அங்கவஸ்திரம் என்று தனது தோற்றத்தை மாற்றியதை, ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் ஹன்சிகா “சென்னையை மிஸ் செய்வதால், அவர் சென்னையின் நினைவுகளை வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil entertainment news tamil actress hansika motwani misses chennai

Exit mobile version