Advertisment

ராமன் - சீதா காதல்... வனவாசம் : மீண்டும் தமிழில் ராமாயணம் சீரியல்!

ராமாயணம் முதன் முதலாக 1987-ம் ஆண்டு ராமானந்த் சாஹார் இயக்கத்தில் இந்தியில் டிவி சீரியலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramayanam Vira

ராமாயணம்

இதிகாசக மற்றும் புராண கதைகளில் ஒன்றான ராமாயணத்தை தழுவி ராமாயணம் என்ற புதிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பிரபலமான புராணக்கதைகளில் ஒன்று ராமாயணம். வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இந்த கதை, தமிழில் கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புராணத்தை கம்பர் ராமாவதாரம் என்ற பெயரில் மறுவடிவமைத்திருந்தார். ராமாயணம் அயோத்தியின் அரசர் ராமர் மற்றும் அவரது மனைவி சீதையின் கதையைச் சொல்கிறது.

இந்த கதையில் உறவுகள், கடமை, வாழ்க்கை முறை மற்றும் போர் ஆகியவற்றை சித்தரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. மேலும் ஒரு இலக்கியப் படைப்பாகவும், வாய்மொழி மற்றும் மரபுகள் மூலமாகவும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட இந்தக் கதை, 1987-ம் ஆண்டு ராமானந்த் சாஹார் இயக்கத்தில் இந்தியில் டிவி சீரியலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல டிவி சீரியல்கள் திரைப்படங்கள் என மக்களின் மத்தியில் ராமாயணம் பேசும் காவியமாக மாறிய நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரபாஸ் நடிப்பில் வெளியான அதிபுருஷ், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர்கோவில் இவை இரண்டும், ராமாயணம் குறித்து மக்கள் அதிகளவில் பேசும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதேபோல் தற்போது ரன்பீர் கபூர் – சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் என்ற படம் இந்தியில் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்தியில் வெளியாகி வரும் "ஸ்ரீமத் ராமாயணம்" (2024) தொடரின் தமிழ் டப்பிங்காக "ராமாயணம்" சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலை சித்தார்த் குமார் திவாரி இயக்கியுள்ளார். இதன் மூலம் சன் டிவி ராமாயணத்தின் புதிய பதிப்பை ஒளிபரப்புகிறது. ஏற்கனவே ஆனந்த சாகர் இயக்கத்தில் வெளியான ராமாயணத்தை சன்டிவி கடந்த 2008-ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பியது. இந்த முறை புதிய சீரியல் வழக்கமான சீரியல் ஒளிபரப்பாகும் நாட்களில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம் ஆகிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Ramayanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment