குழந்தை தேடாம குழு போட்டோ தேவையா? எதிர்நீச்சல் நடிகைகள் ரீசன்ட் க்ளிக்ஸ் : ரசிகர்கள் கமெண்ட்ஸ்

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Ethirneechal Serial News

எதிர்நீச்சல் நடிகைகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரையின் எதிர்நீச்சல் தொடரில் நாயகிகளாக நடித்து வரும் நடிகைகள் தற்போது குழுவாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், நடிகர் வேல ராமமூர்த்தி, மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், கோலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி வரும் நிலையில், முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஆதி குணசேகரனின் மகள் கடத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மருமகள்கள் தான் குழந்தையை வேறு எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல, அனைவரும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், குணசேகரன் வீட்டு மருமகள்களாக கனிகா, மதுமிதா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் குழுவாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், அனைவரும் தென்காசி அழகி போட்டிக்கு போறீங்களா என்று கூறி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில், சிலர், ஆதி குணசேகரன் உங்களை திட்டுவதில் தப்பே இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைள் நிஜ வாழ்க்கையிலும் அந்த கேரக்டராகவே இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு தற்போது ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டுள்ளது பெரிய உதாரணம் என்று சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: