தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சத்யபிரியா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனின் அ்மமா கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அவர் தனது மகனுடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1974-ம் ஆண்டு இந்தியில் வெளியான பிளாங் துருவ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சத்யபிரியா, தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் வில்லி கேரக்டரில் நடித்துள்ள சத்யபிரியா பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக நடித்திருந்தார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் சத்ய பிரியா நடித்திருந்தார்.
தற்போது சின்னத்திரையில் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனின் அம்மா, விசாலாட்சி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியலிகளில் சத்ய பிரியா நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இதில் குறிப்பாக தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கோலங்கள் தொடரில் அவரின் அம்மா கற்பகம் கேரக்டரில் சத்யபிரியா நடித்திருந்தார்.
இதனிடையே சத்யபிரியாவின் மகன் ரவி சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சத்யபிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு மகனே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொழில்ரீதியாக, நடிகை சத்யபிரியா 350-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில், மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். பின்னர் சித்திரம் பேசுதடி, அவளும் நானும், கல்யாண பரிசு, மகாலட்சுமி, நீதானே எந்தன் பொன்வசந்தம், மன்னார் வகையறா, எதிர்நீச்சல் போன்ற பல்வேறு படங்களில் நடித்த சத்யப்ரியா தனது வாழ்க்கையை சின்னத்திரைக்கு மாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“