Advertisment

வரவேற்பை பெறும் எதிர்நீச்சல்... நடிகர், நடிகைகள் சம்பளம் என்ன தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் பெரும் சம்பள விபரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ethirneechal Guna

எதிர்நீச்சல் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதில் இவர்கள் பெறும் சம்பள விபரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில்அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சீரியல் எதிர்நீச்சல்பெண்கள் அடிமைத்தனம், ஆணாதிக்கம் என பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் இந்த சீரியல் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற மெயின் கேரக்டரில் மதுமிதா நடித்து வரும் நிலையில்அவரது கணவர் சக்தி கேரக்டரில்சபரி பிரஷாந்த் நடித்து வருகிறார்.

மேலும், ஆதி குணசேகரன் என்ற மெயின் வில்லன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர், மாரிமுத்து இறந்த நிலையில், அவருக்கு பதிலாக நடிகரும் எழுத்தளருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் திருச்செல்வம், கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கமலேஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 4 படித்த மருமகள்கள் படிக்காத ஆணாதிக்கம் மிகுந்த ஒரு குடும்பத்தில் திருமணமாகி வந்து சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை.

இந்த சீரியலில், நாயகி, மதுமிதா, ஹரிபிரியா, கமலேஷ் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ15,000 சம்பளமாக பெறுவதாகவும், ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகாவுக்கு ரூ12,000 சம்பளமும், நாயகன் சபரி, மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் ரூ10,000 சம்பளமும் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வில்லன் ஆதிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவுக்கு ரூ20,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment