Advertisment

தமிழ் சீரியலில் ஹிஜாப்; நான் தான் ஃபர்ஸ்ட்: எதிர்நீச்சல் நடிகை அதிரடி

பர்ஹானா கேரக்டரில் நடித்து வரும் நடிகையின் உண்மையான பெயர் ஜீபா ஷெரின். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், சீரியலிலும் முஸ்லீம் பெண்ணாகவே நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sherin

எதிர்நீச்சல் ஷெரின்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் ஜீவாநந்தம் கேரக்டரின் பி.ஏ.வாக நடித்து வரும் நடிகை ஜிபா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல். ஆணாதிக்கத்திற்கு எதிரான போராடும் குடும்ப பெண்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில், அவரே இந்த சீரியலின் ஜீவாநந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ஆணாதிக்கம் படைத்த வில்லத்தனத்தில் மாரிமுத்து மிரட்டி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நடிகர் விஜயின் அம்மா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பார்த்து வரும் இந்த சீரியல் குறித்து சமீபத்தில் அரசியல் பிரபலமான சுப.வீரபாண்டியன் வெளியிட்டிருந்த கருத்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், ப்ரமோஷனாகவும் அமைந்தது. இந்த சீரியலில் ஜீவாநந்தமாக நடித்து வரும் இயக்குனர் திருச்செல்வத்தின் பிஏவாக பர்ஹானா நடித்து வருகிறார்.சமூக புரட்சி செய்யும் இவர் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடையை தொடர்ச்சியாக அணிந்து வருகிறார்.

HIjab Actress Shirin

எதிர்நீச்சல் நடிகை

பர்ஹானா கேரக்டரில் நடித்து வரும் நடிகையின் உண்மையான பெயர் ஜீபா ஷெரின். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், சீரியலிலும் முஸ்லீம் பெண்ணாகவே நடித்து வருகிறார்.  இதனிடையே ஒரு முஸ்லிம் நடிகை ஹிஜாபி அணிந்து தமிழ் சினிமா சீரியலில் நடித்தது நான்தான் முதல் முறையாக என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலில் பெண் நடிகைக்கு அவருடைய மதத்தின் அடையாளத்தோடு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து இயக்குனர் திருச்செல்வம் முதல் முறையாக "புரட்சியை" தொடங்கி வைத்திருக்கிறார். அதே நேரத்தில் இவருடைய கேரக்டரின் முக்கியத்துவத்தால் இவரை போல இருக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனக்கு "தன்நிலை மாறாமல்" நடிக்க வாய்ப்பு கொடுத்த திருச்செல்வத்திற்கு ஷிபா நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment