Advertisment

எதிர்நீச்சல் டீம் ரீயூனியன் : சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்; மாரிமுத்துவுக்கு நினைவு பரிசு இருக்கா?

மீண்டும் இணைந்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Ethirneechal Serilaa

எதிர்நீச்சல் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த எதிர்நீச்சல் சீரயில் கடந்த ஜூன் 8-ந் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இந்த சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் மீண்டும் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில்தான் படிக்கவில்லை என்றாலும்படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர்தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் முதலில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எதிர்பாராத விதமாக மாரிமுத்து மரணமடைந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்கும் வீழ்ச்சி ஏற்பட்டது. மாரிமுத்துவுக்கு பதிலாக டெரர் வில்லனாக களமிறங்கிய நடிகர் வேல ராமமூர்த்தி, அவரது பாணியில் நடித்து வில்லத்தனத்தை செய்திருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் மாரிமுத்து இல்லாத வெற்றிடம் எதிர்நீச்சலில் தெரிகிறது என்று கூறி வந்தனர். மேலும் சமீப காலமாக கதையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக எதிர்நீச்சல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இதன் காரணமாக இயக்குனர் திருச்செல்வம் சீரியலை முடிக்க திட்டமிட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் 8-ந் தேதியுடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இறுதிநாள் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது, எதிர்நீச்சல் குழு மீண்டும் இணைந்துள்ளது. இந்த சந்திப்பின்போது குழுவின் சார்பில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் சீரியலில் ஏற்று நடித்த கேரக்டரில் பெயரில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மரணமடைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு பரிசு இருக்கிறதா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதேபோல் சீரியல் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது சமூகவலைதளங்களில் இதை வைத்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment