ரஜினி, விஜய் படங்களுக்கு திடீர் நெருக்கடி... பெப்சி கூட்டமைப்பு புதிய தீர்மானம்
புதிய விதிகளின்படி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படங்கள் வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் அவசியமின்றி படபிடிப்பு நடத்த கூடாது
புதிய விதிகளின்படி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படங்கள் வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் அவசியமின்றி படபிடிப்பு நடத்த கூடாது
தமிழ் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஊழியர்கள் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) என்ற அமைப்பின் மூலம் பணியாற்றி வருகின்றனர். தமிழ்த் திரையுலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு இந்திய அமைப்பான பெப்சி, தற்போது தமிழ் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்று புதிய விதியை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகளின்படி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படங்கள் வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் அவசியமின்றி படப்பிடிப்பு நடத்தாமல் தமிழ்நாட்டில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த விதிகள் பலருக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடக பயனர்கள் இந்த விதிகளை விமர்சித்தனர்.
தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்துள்ள புதிய விதிகள்
Advertisment
Advertisements
தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் கலைஞர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்.
திரைப்படங்களின் படப்பிடிப்பு தமிழகத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.
தேவையின்றி வெளி மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ படப்பிடிப்பு நடத்தக் கூடாது.
ஷூட்டிங் சரியான நேரத்தில் முடிவடையவில்லை அல்லது பட்ஜெட் அதிகமானது என்றால், தகுந்த காரணங்களுடன் தயாரிப்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
மோகன்லால் - சிவராஜ்குமார் - சுனில் - பஹத் பாசில்
இது குறித்து தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் கூறுகையில், தமிழ் திரையுலகம் தமிழ் நடிகர்களுடன் இப்படி ஒத்துழைக்க வேண்டும், அதுவே போதுமானது. இவற்றை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் படத்தின் கதையை எழுதியவர் என்றால், கதையின் உரிமையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்கள் பிற துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் பெப்சி (FEFSI) ஊழியர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். பல திரைப்படங்கள் வெளிநாட்டு இடங்களில் படமாக்கப்பட்டு வருவது சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் பெப்சி (FEFSI) ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கியது கடுமையான விதிகளை வகுக்க முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் துறைகளில் ஒன்றாக இருந்து வரும் கோலிவுட்டிவில் இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். இதில் குறிப்பாக தமிழ் சினிமாவில் மலையாள நடிகர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். பல பெரிய பட்ஜெட் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் தமிழ் படங்கள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெப்சி (FEFSI) வகுத்துள்ள புதிய விதிகளை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“