தமிழ் திரையுலகில் கலைக்குடும்பங்கள் பல இருந்தாலும், குறிப்பிட்ட குடும்பம் மட்டும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையிலும், பன்முகத் திறமையிலும் தனித்து நிற்கிறது. அதுதான் நடிகர் விஜயக்குமார் குடும்பம். ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக, 3 நடிகர்களும் 6 நடிகைகளும் என கோடம்பாக்கத்தில் நீங்கா இடம்பிடித்த கலை வம்சமாக இவர்களின் பயணம் தொடர்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயக்குமார், தனது இளமைக்காலத்தில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் வில்லன் வேடங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என பன்முகத் திறமையைக் காட்டினார். பின்னர், பாசமான அப்பா, பொறுப்பான குடும்பத் தலைவர், கண்டிப்பான தாத்தா என பல்வேறு பரிமாணங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவரது நடிப்பு அனுபவமும், கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் அர்ப்பணிப்பும் இன்றும் பல இளம் நடிகர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறை நடிகர்கள் அடுத்தடுத்து திரைத்துறைக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், ஒரே குடும்பத்திலிருந்து 3 தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்தியத் திரை உலகிலேயே அரிதான நிகழ்வாகும். விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த ‘ஓ மை டாக்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 3 தலைமுறை நடிகர்கள் ஒரே ஃப்ரேமில் நடித்த அரிய காட்சி அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/10/vijayakumar-family-2025-07-10-10-52-33.jpg)
இதற்கு மறுபுறம், விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் நடிகையாக நடித்த வனிதா, நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தார். வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார் மிஸ்டர் அன்ட் மிஸஸ் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். அடுத்து அவரும் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமாரின் மற்றொரு மகள் ப்ரீத்தா விஜயகுமார். இவர் அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் தான் பிரபல இயக்குநர் ஹரி. விஜயகுமாரின் மற்றொரு மகள் ஸ்ரீதேவி விஜயகுமார். ’ப்ரியமான தோழி’, ‘தித்திக்குதே’, ’தேவதையை கண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மிகப்பெரிய சினிமா குடும்பமான விஜயகுமார் குடும்பத்தில் மகன், மகள்கள் தொடங்கி பேரன், பேத்தி வரை சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.