/tamil-ie/media/media_files/uploads/2020/05/b739.jpg)
கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் நிகழ்ந்த மற்றொரு வேதனை சம்பவம் இது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் பிகே ராஜ்மோகன் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளனர். இவருக்கு வயது 47. 2008ம் ஆண்டு அழைப்பிதழ் எனும் திரைப்படத்தை ராஜ்மோகன் இயக்கி இருந்தார். இதில் சோனா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரம்யா பாண்டியன், வி.ஜே மணிமேகலை... பிக்பாஸ் 4 பட்டியல் லீக்?
இதுதவிர கேடயம் எனும் படத்தையும் இயக்கி இருந்தார். சென்னை கேகே நகரில் தனியாக வசித்து வந்த இயக்குனர் ராஜ்மோகன், திடீர் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது,
ஆனால், உறவினர்கள் யாரும் இவரது உடலை பெற்றுக் கொள்ள முன்வராததால், நேற்று(ஏப்.2) மாலை 4 மணிக்கு, நெசப்பாக்கம் சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் பாஷை பேசிய நடிகை ரேவதி
இயக்குநர் வ.கீரா, மித்ரன் பாக்கியராஜ் மற்றும் இணை துணை உதவி இயக்குனர்கள் என கிட்டத்தட்ட 25 பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.