2004-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சீனு வசந்தி லட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா. தமிழில் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மலையாள நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பத்மப்ரியா, நான் தமிழ் சினிமாவில் நடித்த போது என்னை ஒரு இயக்குநர் அறைந்தார். அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
அந்த நேரத்தில் ஊடகங்களில் நான் இயக்குனரை அறைந்ததாக பொய்யாக தகவல்கள் பரவின. அது உண்மையாக இருந்தால் ஏன் அது பற்றி என்னிடம் யாரும் கேட்கவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இயக்குனருக்கு 6 மாதங்கள் திரைப்படத் துறையால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அந்த சம்பவத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினேன். அது என் சினிமா வாழ்க்கைகயில் நடந்த ஒரு மோசமான அனுபவம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“