/indian-express-tamil/media/media_files/2025/07/08/madhampatti-2025-07-08-18-31-38.jpg)
மாதம்பட்டி ரங்கராஜுக்கு தங்கையான பிரபல நடிகை: 'இவங்க இடையே இப்படி ஒரு உறவா?'
மருத்துவ படிப்பை படித்து முடித்த இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் டாக்டராக விருப்பம் இல்லை என்றும் நடிகையாகத்தான் போகிறேன் என அடம்பிடிக்க அவரை ஹீரோயினாக கார்த்தியின் விருமன் படத்தில் அறிமுகப்படுத்தினார் ஷங்கர். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2022-ல் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, மிஸ்கின், சுனில் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் ஹீரோயினாக நடித்து வெற்றி வாகை சூடினார். ஆனால், அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக நேசிப்பாயா படத்தில் நடித்து தோல்வியைத் தழுவினார். மே மாதம் வெளியான தெலுங்கு படமான பைரவம் படமும் அதிதி ஷங்கருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ்மோர் படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் வெளியாக முடியாமல் தவித்துவரும் அந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 31 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு எப்போதோ நிறைவடைந்த நிலையிலும், அதிதி ஷங்கர் கைவசம் புதிதாக எந்த படமும் இல்லை என்கின்றனர்.
இந்நிலையில், அதிதி ஷங்கர் கடந்த 6-ம் தேதி தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரங்கராஜ் தனது பதிவில், "சில உறவுகள் ஆஃப் ஸ்க்ரீனிலும் ஆன் ஸ்க்ரீனிலும் அப்படியே மாறாமல் இருக்கும், என் அன்பு தங்கச்சி அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு தேங்ஸ் அண்ணா என கமெண்ட் அடித்துள்ளார் அதிதி ஷங்கர். இந்தப் பதிவு, திரையுலகில் அரிதாகக் காணப்படும் உண்மையான பாசப் பிணைப்பைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
பொதுவாக, திரையுலகில் நட்சத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் பெரும்பாலும் கிசுகிசுக்களுக்கும் ஊகங்களுக்கும் உள்ளாவது வழக்கம். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ்-அதிதி ஷங்கர் இடையேயான இந்தப் பரிமாற்றம், தொழில்முறை உறவுகளையும் தாண்டி, குடும்ப பாசத்திற்கு இணையான அன்பான பந்தத்தை எடுத்துக்காட்டுகிறது. திரையுலகில் ஆரோக்கியமான உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, ரசிகர்களுக்கும் நேர்மறையான முன்மாதிரியாக அமைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.