Advertisment

காசோலை மோசடி: சென்னையில் அஜித் பட தயாரிப்பாளர் கைது

நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரின் வீட்டில் வைத்து கைதுசெய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

author-image
WebDesk
New Update
Tamil Film producer Sivasakthi pandian arrested in cheque bounce case News in Tamil

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1996ல் வெளிவந்த காதல் கோட்டை உள்பட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Cinema | Actor Ajith: தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக இருந்து வருபவர் சிவசக்தி பாண்டியன். இவர் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1996ல் வெளிவந்த காதல் கோட்டை மற்றும் 2000 ஆம் ஆண்டில் பார்த்திபன், முரளி நடிப்பில் வெளிவந்த வெற்றிக்கொடி கட்டு உள்பட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர். 

Advertisment

இந்நிலையில், 2010ல் சிவசக்தி பாண்டியன் தெலுங்கில் பிரபல நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்காக ராஜ் டெலிவிஷன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்து முன்பணமாக 1 கோடியே 70 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் படத்தின் உரிமையை அந்த நிறுவனத்திற்கு அவர் வழங்கவில்லை. மேலும், அதற்கு அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல், திரும்பிவிட்டது. 

இதைதொடர்ந்து, அந்த நிறுவனம், சிவசக்தி பாண்டியன்மீது காசோலை மோசடி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்த தொகையை வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிவசக்தி பாண்டியன் பணத்தை திரும்பக் கொடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரின் வீட்டில் வைத்து கைதுசெய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி, சிவசக்தி பாண்டியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Ajith Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment