சிக்கன் என்றாலே அனைவரின் நாவில் எச்சில் ஊற வைக்கும் ஒரு உணவு. அதிலும், காரசாரமான உணவுகளை விரும்புபவர்களுக்கு, கோழி மிளகாய் வறுவல் ஒரு அருமையான விருந்தாகும். இந்த ரெசிபி, சிக்கனின் மென்மையும், மிளகாயின் காரமும், மசாலாக்களின் மணமும் கலந்த ஒரு அட்டகாசமான கலவை. இதை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழி - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
காய்நத் மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், கோழி துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, சிக்கனை சேர்த்து வதக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும் 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் சுவையான சோம்பேறி சிக்கன் ரெடி. இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, அடுப்பை அணைக்கவும்.