scorecardresearch

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருட்டு : பணியாளர்கள் மீது புகார்

படைவீரன் என்ற படத்தில் நடித்த விஜய் யேசுதாஸ் தற்போது மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Vijay Yesudas
பாடகர் விஜய் யேசுதாஸ்

பிரபல சினிமா பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துரையில் நடிகர் பாடகர் என பயணித்து வருபவர் விஜய் யேசுதாஸ். பழம்பெரும் பாடகரான யேசுதாஸின் மகனான இவர், அவன் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படைவீரன் என்ற படத்தில் நடித்த விஜய் யேசுதாஸ் தற்போது மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். க்ளாஸ் பை ய சோல்ஸர், கோலம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் யேசுதாஸ் பாடகராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். ஃபரண்ட்ஸ், ராம், ஜெயம், பட்டாஸ் உள்ளிட்ட பல படங்களில் பாடல் பாடியுள்ளார்.

இந்நிலையில், சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் விஜய் யேசுதாஸ் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், தற்போது அவரது வீட்டில் 60. சவரன் நகைகள் திருடுபோயுள்ளதாக அவரது மனைவி தக்ஷனா பாலா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனது வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை அபிராமபுரம் போலீசார் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தேனாம்பேட்டை வீட்டில் பழங்கால பொருட்களுடன் 200 சவரன் நடைகள் திருப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணியாற்றியவர்களே அந்த நகைகயை எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil gold and diamonds jewellery robber in singer vijay yesudas home