நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களே நமக்கு பெரிய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இதில் முக்கியமான ஒன்று பூண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூண்டை, வைத்து தண்ணீர் தயாரித்து குடித்தால், மிகவும் ஆரோக்கியமான இருக்கும் இந்த பூண்டு தண்ணீர் எப்படி செய்வது தெரியுமா?
Advertisment
2 பல் பூண்டை எடுத்து, நன்றாக நசுக்கி, ஒரு பவுலில் தண்ணீர் வைத்து அதில் வைத்துவிடவும். இந்த பவுலை மூடக்குடாது. எப்போதுமே சமையலுக்கு பூண்டை பயன்படுத்தும்போது, 10 நிமிடத்திற்கு முன்பாகவே , பூண்டடை நசுக்கியோ அல்லது நறுக்கியோ தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். குறிப்பாக காற்று பூண்டில் படும்படி வைக்கவும். பூண்டு காற்றில் படும்படி இருந்தால் தான் அதில் இருந்து, ஹைலீஸ் என்ற எண்சைமன் வெளியாகும்.
ஹைலீஸ் என்ற எண்சைமன் வெளியாகி, பூண்டில் இருந்து, அலிசீன் என்ற முக்கியமான வேதிப்பொருளை உருவாக்க துணையாக இருக்கும். பூண்டில் இருக்கும் ஆரோக்கிய நன்மைக்கு, முக்கிய காரணம் இந்த அலிசீன் என்ற வேதிப்பொருள் தான். இந்த அலிசீன் சரியான முறையில் உருவாகினால் மட்டும் தான் பூண்டில் இருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் முழுவதுமாக கிடைக்கும். இதன் காரணமாகத்தான் சமைப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பூண்டை நசுக்கி வைக்க வேண்டும்.
2 பல் பூண்டை எடுத்து நன்றாக நசுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில், கொதிக்க வைக்க வேண்டும். அதிக நேரம் இல்லாமல், ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து, வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம். பூண்டை அப்படியே சாப்பிட வேண்டும் என்றாலும், அதை அப்படியே வடிகட்டாமல் சாப்பிட்டுவிடலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பூண்டு தண்ணீரை குடிப்பது உடலுக்கு நன்மைகள் அதிகம் தரும்.
Advertisment
Advertisement
அதே சமயம் வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், பூண்டு நீரை வெறும் வயிற்றில் குடித்தால் இந்த பிரச்னை இன்னும் அதிகமாகிவிடும். இந்த பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டபிறகு, ஒரு மணியில் இருந்து ஒன்றரை மணி நேரம் கடந்த பிறகு பூண்டு நீரை குடிக்கலாம். பூண்டு நீர், உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தும். கெட்ட கொழுப்புகளை நீக்கும். தொடர்ந்து 3 மாதங்கள் இந்த நீரை குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.
இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். காசநோய் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு நீர், முக்கிய ஆரோக்கிய நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கு இருக்கும் குடற்புழு பிரச்னை, புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கவும் பூண்டு நீர் உதவி செய்யும். பூண்டை மட்டுமே தினமும் சாப்பிட்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கும் பூண்டு ஒரு முக்கிய ஆரோக்கிய நன்மையாக இருக்கிறது என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“