உடலில் இயக்கும் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகங்கள் முக்கியமானது. 2 சிறுநீரகங்கள் இருக்கும்போது ஒன்று செயல் இழந்தாலும் மற்றொன்று பயன்படும் என்ற வசதி இருந்தாலும் கூட, சிறுநீரகங்களை சிறப்பாக பாதுகாப்ப வேண்டியவது அவசியம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாத நிலையைக் சிறுநீரக செயல் இழப்பு என்று சொல்லலாம். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் மற்றும் பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.
Advertisment
சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தெரியாமல் இருக்கலாம். அதே சமயம், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழித்தல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் அல்லது நுரை அதிகமாக வருதல், கணுக்கால், பாதம், முகம் மற்றும் கைகளில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் சிறுநீரகங்கள் பாதிப்பை உறுதி செய்யும் வகையில் இருக்கும். சிறுநீரகங்கள் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உணவில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இந்த 2 கீரைகளை முக்கியமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார். அதில் ஒன்று மூக்கிரட்டை கீரை, மற்றொன்று வெந்தய கீரை. மூக்கிரட்டை கீரையை தினமும் கஷாயமாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வரலாம். வெந்தய கீரையையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்ற கீரைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்றாலும் இந்த இரண்டு கீரைகளையும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
அதேபோல் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ள கூடாது. காலையில் உப்பு அதிகமாக சாப்பிடுகிறேன். மதிய உணவில் உப்பு இல்லாமலும், இரவில் உப்பு சேர்த்தும் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. முழுமையாக உப்பு இல்லாத உணவை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 1-2 கிராம் அளவுக்கு தான் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.