ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் பதான் படத்தின் பாடல் ஒன்றில் நடிகை தீபிகா படுகோனே ஆடிய டான்ஸ் ஸ்டெப் தற்போது சமூகவலைதள பிரபலங்கள் பலரும் முயற்சித்து வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் படம் பதான். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு பாடலில் தீபிகா டுபீஸ் உடையில் நடனமாடியது பெரும் வைரலாக பரவியது.
இதில் தீபிகா அணிந்திருந்த காவி உடை குறித்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தன்வி கீதா ரவிசங்கர் என்ற சமூகவலைதள பிரபலம் ஒருவர் தீபிகா படுகோனின் அசைவுகளை மீண்டும் உருவாக்கி வீடியோ வெளியிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
பதான் படத்தின் புதிய பாடலான பேஷரம் ரங் என்ற பாடல்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. பலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் இந்த பாடலின் நடன அசைவுகளை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். இந்த வீடியோக்களுக்கு பலரும் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் தன்வி கீதா ரவிசங்கர் என்ற பெயரில் பாசிட்டிவ் ஃபேஷன் மிக்க ஒருவர் தீபிகா படுகோனின் பாடலை மீண்டும் உருவாக்கி வெளியிட்டள்ள இந்த வீடியோவை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ள தன்வி கீதா ரவிசங்கர் பாசிட்டிவிட்டியைப் பரப்புவதில் பெயர் பெற்றவர். அவரது பல பதிவுகள் பெண்களுக்கான ஃபேஷன் நுண்ணறிவைப் பகிர்வதை நோக்கமாகக் கொண்டவையாக உள்ளன.
தற்போது சமூக லைதளங்களில் பதான் பாடல் வீடியோ மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இவர், வீடியோவில் ஊதா நிற பிகினியில் நீல நிற சரோன் அணிந்துள்ளார். கடற்கரையில் நடந்து செல்லும் போது, பாடலின் ஹூக் ஸ்டெப்ஸ்களை செய்கிறார். இந்த பதிவில், "பேஷாராக இருங்கள். நீங்கள் விரும்புவதைச் செய்வது, நீங்கள் விரும்பியதை அணிவது மற்றும் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வது உங்களை ஒவ்வொருவரின் பார்வையில் "பேஷாரம்" ஆக்கினால், அது முற்றிலும் நல்லது. நாம் 2023 இல் நுழைகிறோம், மேலும் உலகம் நமது சுயத்தை விட குறைவாக எதையும் பெறப்போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்."
இந்த வீடியோ பதிவிட்டு சில சிலமணி நேரங்களில் 9000 லைக்ஸ் மற்றும் பல கருத்துகளைக் கொண்டுள்ளது. பலர் அவரது நடனத்தை விரும்பி, அவரது நம்பிக்கையைப் பாராட்டினர். இதில் ஒருவர், "ஆமாம்.... நான் முழு நேரமும் சிரித்துக் கொண்டிருந்தேன். உங்கள் நம்பிக்கை எனக்கு இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர் மேலும் கூறுகையில், "அப்படியானால் தீபிகாவின் உடல் சூடு அல்ல பாடலை சூடாக்குகிறது!!! இந்த வீடியோவைப் பார்த்து நான் வியந்தேன்... நீங்கள் மிகவும் சூடாக இருந்தீர்கள். வந்தாய் பார்த்தாய் வென்றாய் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றும், "நம்ப முடியவில்லை. பாடலின் ஸ்டெப்புகள் சரியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“