/indian-express-tamil/media/media_files/2025/04/23/ZWWV9s23qgGcI8GK03Hj.jpg)
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முயற்சியில், ரசிகர்கள் ஒருவர் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் போட்டியாளர்களும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் 8-வது சீசன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. விஜய் சேதுபத தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், முத்து குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், சின்னத்திரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்களாக இருக்கும் நபர்களை போட்டியாளர்களாக பங்கேற்க வைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில சீசன்களாக, சமூகத்தில் கவனம் ஈர்க்கும் சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த சீசனில், பிக்பாஸில் பங்கேற்க விரும்புவர்கள் தங்கள் சுயவிபரங்களை அனுப்பலாம் என்ற விளம்பரமும் வந்தது.
இந்த விளம்பரங்களை பார்த்து தங்கள் விபரங்களை அனுப்பி வைத்த சில போட்டியாளர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில், நடித்து வருகின்றனர். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நபர், பிக்பாஸ் 9-வது சீசனில் பங்கேற்பதற்காக நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஆல் ஓவர் தமிழ்நாடு முட்டிபோட்டே சுத்தபோறேன். பிக்பாஸ் சீசன் 9-ல் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நம்பி உங்களையும் நம்பி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன். உங்களால் முடிந்தவரை எனக்கு சப்போர்ட் செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும சப்போர்ட் தான் என்னை ஒவ்வொரு ஸ்டெப் மேலே கொண்டு செல்லும். எல்லோராலையும் எல்லாம் முடியும் என்று நான் நிரூபித்து காட்டப்போகிறேன். இன்றில் இருந்து எனது ஆட்டம் ஸ்டார்ட் ஆகுது.
I don’t know what to say. Feel sad for this guy. It’s just a game show which gives you fame for 3 to 6 months.@VijaySethuOffl@vijaytelevision#biggbosstamilpic.twitter.com/8bJl38nxAr
— Imadh (@MSimath) April 23, 2025
இந்த வீடியோவை விஜய் டிவி மற்றும் விஜய் சேதுபதி சாருக்கு ஷேர் பண்ணுங்க. வெற்றியும் நமதே, தோல்வியும் நமதே என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒருசிலர், கடுமையான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.