“தமிழ் தான் இணைப்பு மொழி” - தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இசைப் புயல்
ஏற்கனவே தமிழணங்கு என்று புகைப்படத்தை பகிர்ந்த அவரின் தற்போது இந்த பேச்சும் இந்தி திணிப்பிற்கு எதிரான தன்னுடைய கருத்தை வலுவாக ஏ.ஆர். ரஹ்மான் முன்வைக்கிறார் என்பதை காட்டுகிறது.
Tamil is only our link language says AR Rahman கடந்த வாரம் அமித் ஷா கூறிய ஒரு வார்த்தை காட்டுத் தீ போல தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவ துவங்கியுள்ளது. ஒரு மாநிலம் மற்றொரு அண்டை மாநிலத்துடன் தொடர்பு கொள்ள இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்துங்கள். ஆங்கிலத்தை கைவிடுங்கள் என்று உள்துறை அமைச்சரும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார். இந்த குழுவின் 37வது கூட்டத்தில், டெல்லியில் பேசிய அவர், ஆங்கிலத்திற்கு மாற்றாக பல மாநிலத்தை சேர்ந்த மக்கள் இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தமிழணங்கு என்று தமிழ் தாய் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அந்த சூழலில் அமித் ஷா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தமிழ் தான் இணைப்பு மொழி என்று காரில் அமர்ந்த அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆங்கிலம் இந்திய மொழி இல்லை என்ற கருத்தை மனதார ஏற்றுக் கொண்ட அமித் ஷா ஆங்கிலத்தை கைவிடும் படி கூறினாலும் ஆங்கிலம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மொழியாகவும் உலக நாடுகளுடான தொடர்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய கலாச்சாரத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சகித்ய அகாதெமி விருதுகள் ஆங்கிலத்தில் எழுந்தும் சிறந்த இந்தியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் இருப்பதால் தான் பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் ஐ.டி.பூங்காக்களின் அடையாளங்களாக மாறியிருக்காது என்றும் பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil