கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளிய ரஜினிகாந்த்... பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படம் தமிழகத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படம் தமிழகத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Kamalhaasan

கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்துள்ள அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் படம் வெளியானதில் இருந்து வசூல் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தகர்த்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் தமிழ்நாட்டின் மொத்த வசூலை இப்படம் முறியடித்தது. முன்னதாக, பிரபாஸ் நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' தான் மாநிலத்தில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையை விக்ரம் படம் முறியடித்த நிலையில், தற்போது விக்ரம் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது.

விக்ரம் படத்தை முந்தினாலும் ஜெயிலர் படம் 2-வது இடத்தில் தான் உள்ளது. முதலிடத்தில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்: பாகம் 1' படம் உள்ளது. அதே சமயம் ஜெயிலர் படம் வெற்றிகரமாக மூன்று வாரங்களை கடந்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்றும் பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. ஆனால் படத்தின் எச்.டி பிரிண்ட் இணையத்தளத்தில் கசிந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இது குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா வெளியிட்டுள்ள கருத்தின்படி,  ஜெயிலர் படம் தமிழகத்தில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது. 'பிஎஸ் 1' முதல் இடத்தில், 'ஜெயிலர்', 'விக்ரம்', 'பாகுபலி 2' மற்றும் 'விஸ்வாசம்' ஆகியவை தமிழ்நாட்டின் எல்லா நேரங்களிலும் அதிக வசூல் செய்த டாப் 5 ஆகும். பாக்ஸ் ஆபிஸில் 21வது நாளில், 'ஜெயிலர்' இந்தியாவில் ரூ 2.75 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 21 நாள் மொத்த வசூல் இப்போது ரூ. 325.35 கோடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: