ஷாருக்கானின் ஜவான் படம் முன்பதிவில் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை உண்மையா அல்லது போலியானதா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக்கான் அளித்துள்ள பதில் இணையணத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், அனிருத் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இதனிடையே ஜாவன் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடந்த வாரம் இறுதியில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஜவான் முன்பதிவு டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி இதுவரை நாடு முழுவதும் ஐந்து லட்சம் டிக்கெட்டுகளை விற்று கிட்டத்தட்ட 17 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) அதிக திரையரங்குகளுக்கான முன்பதிவு திறக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தொழில்துறை கண்காணிப்பாளரான ஸ்கேனிக் (Sacnilk) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜவான் படத்திற்காக மொத்தம் 5,77,255 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்தி மார்க்கெட்டில் 2டி வடிவில் 5,29,568 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மேலும் 11,558 பேர் ஐமேக்ஸ் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சந்தைகளில் முறையே 19,899 மற்றும் 16,230 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் ரூ.16.93 கோடியாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
அதேபோல் திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கூறுகையில், இந்தியாவின் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜவான் படம் அதிகபட்ச முன்பதிவை உறுதி செய்துள்ளது. பிவிஆர் (PVR ) 1,12,299 டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஐமேக்ஸ் ( IMOX) 75,661 டிக்கெட்டுகளை விற்றுள்ளது, அதைத் தொடர்ந்து சினிபோலிஸின் 40,577 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஹைதராபாத்தில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் (58,898) விற்கப்பட்டுள்ளதால், ஷாருக்கின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்க ஹைதராபாத் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
While #Jawan is having SOLID advances at national chains, the advance booking status at *non-national chain cinemas* and *single screens* is PHENOMENAL as well… Single screens in #Delhi, #UP, #Rajasthan, #Bihar and the #Hindi heartland are showing EXCEPTIONAL results… So much…
— taran adarsh (@taran_adarsh) September 3, 2023
தொடர்ந்து கொல்கத்தா 40,035 டிக்கெட்டுகளுடன் பின்தொடர்கிறது. மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி- என்சிஆர் (39,535), மும்பை (39,600), மற்றும் பெங்களூரு (39,325) ஆகியவையும் ஜவான் படத்தின் முன்பதிவு சாதனைக்கு முக்கிய காரணமாக உள்ளன என கூறியுள்ளார்.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஜவான் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது. இதில் குறிப்பாக நகரங்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கூட அதிகாலை காட்சிகளுக்கு வழிவகுத்தது.
ஜவான் காலை 6 மணி காட்சிகள்
இந்தியாவில் ஜவான் படம் உறுதியான முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும், வெளிநாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் அல்லது ஒற்றைத் திரைகளில் முன்பதிவு நிலை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதேபோல் டெல்லி, உபி, ராஜஸ்தானில் ஒற்றைத் திரைகள், பீகார் மற்றும் இந்தியாவின் மையப்பகுதிகளிலும் முன்பதிவு அதிகரித்துள்ளது. இதனால் அதிக தேவை காரணமாக பல திரையரங்குகளில் காலை 6 மணிக்கு, 2 அடுக்கு திரையரங்குகளில் கூட ஜவான் படத்தை திரையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் முன்பதிவு குறித்து ஷாருக்கான் பதில்,
சமூக ஊடகங்கள் மூலம் நேற்று தனது ரசிகர்களுடன் உரையாடிய ஷாருக், சாதனை படைத்த ஜவான் முன்பதிவு டிப்கெட் விற்பனை குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நீங்கள் அனைவரும் ஒரு சமூகமாக திரையரங்குகளில் படங்களைப் பார்க்க விரும்புவதில் மிகவும் மகிழ்ச்சி. இன்ஷா அல்லாஹ் ஜவான் அனைவருக்கும் பெரிய திரை அனுபவமாக இருக்கும். பலரின் அன்பால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்! இந்த மகத்தான அன்பிற்காக எனது குடும்பத்தினரும் நானும் அனைவருக்கும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
இதனிடையே ஜவான் அட்வான்ஸ் புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உண்மைத்தன்மை குறித்து ஜவான் முன்பதிவு எண்களில் எவ்வளவு உண்மையானது மற்றும் எவ்வளவு போலியானது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷாருக்கான், குழப்பமாக பேசாதீர்கள். அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் நல்ல உணர்வுகள் வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு சிறந்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.