Advertisment

ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்: எதை பார்க்கப் போறீங்க?

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படம் வெளியாவதால் சாதாரண நாட்களில் சிறுபட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema

ஜூன் 2-ல் வெளியாகும் தமிழ் சினிமா

சினிமாத்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளதால் வாராவாரம் பல படங்கள் வெளியாகி வருகிறது. பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படம் வெளியாவதால் சாதாரண நாட்களில் சிறுபட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமாக உளளது. அந்த வகையில் ஜூன் மாதத்தின் முதல் வாரமான நாளை 4 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.

Advertisment

வீரன்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நாயகனாக உயர்ந்துள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. கடந்த ஆண்டு அன்பறிவு எனற படத்தில் நடித்திருந்த இவர் நடிப்பில் வீரன் என்ற படம் தயாராகியுள்ளது. சூப்பர் ஹீரோ கேரக்டரை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஏ,ஆர்,கே.சரவண் இயக்கியுள்ளார். வினய், அதிரா ராய், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வீரன் படம் ஜூன் 2-ந் தேதி வெளியாக உள்ளது.

காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்

கேப்டன் படத்திற்கு பிறகு காஃபி வித் காதல் வசந்த முல்லை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் ஆர்யா தற்போது காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். கிராமத்து அதிரடி படங்களை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் முத்தைய இயக்கியுள்ள இந்த படத்தில் தி கேரளா ஸ்டேரி படத்தில் நடித்த சித்தி இதானி நாயகியாக நடித்துள்ளார். பிரபு, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஜூன் 2-ந் தேதி வெளியாக உள்ளது.

உன்னால் என்னால்

சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள உன்னால் என்னால் படத்தை எ.ஆர்.ஜெயகிரிஷ்னா இயக்கியுள்ளார். ரவி மரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு ரிஸ்வான் இசையமைத்துள்ளார்.

துரிதம்

ஜெகன் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் துரிதம். சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பூராமு, ஏ.வெங்கடேஷ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை ஆண்டரியா ஒரு பாடலை பாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment