ஹீரோயின் லுக்கில் அஜித் மகள் அனோஷ்கா… கலைஞர் குடும்ப வாரிசு பகிர்ந்த போட்டோ!

நடிப்பு மட்டுமல்லாது பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளிலும் அஜித் தன்னை நிரூபித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தனது அசாத்தியமான நடிப்புத்திறமை மற்றும் எளிமையின் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் தனது வயதை மறைந்து இன்னும் இளமை நாயகனாக வரும் பல நடிகர்களுக்கு மத்தியில் தனது உண்மையான தோற்றத்தை அப்படியே திரையில் காண்பித்து வரும் அஜித், ரசிகர்களிடம் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் நடிகர் அஜித் தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவே அண்ணார்ந்து பார்க்கும் ஒரு நடிகரான வலம் வருகிறார். நடிப்பு மட்டுமல்லாது பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளிலும் தன்னை நிரூபித்து வருகிறார். மேலும் படங்களில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறார்.

சினிமாவில் இவரின் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் தற்போது பல நடிகைகளை கவர்ந்துள்ளது. இப்படி தான் நடிப்பேன் என சால்ட் அன் பெப்பர் லுக்கில் மாஸ் காட்டி வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இந்த லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த அஜித் தற்போது தனது 61-வது படத்திற்காக பிஸியாக நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் 3-வது முறையாக இந்த ஜித் படத்தை இயக்க போனி கபூர் 3-வது முறையாக அஜித் படத்தை தயாரிக்கிறார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வரும் நிலையில், தற்போது அஜித்தின் பேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமர்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை அஜித் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அஜித், அவரது மகள் அனோஷ்கா, ஷாலினி உள்ளிட்ட3 பேருடனும் எடுத்த புகைப்படத்தை தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தபதிவில் சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்னு அவர் பக்கத்தில் இருக்கும்போது அநத எனர்ஜியை விவரிக்க முடியாது. இந்த மனிதர் முற்றிலும் பிரம்மிக்க வைக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மகள் அனோஷ்கா ஹீரோயின் அளவிற்கு அழகாக உள்ளாரே என புகழ்ந்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil kalaignar grand son dhayanithi share actor ajith family photo