Advertisment
Presenting Partner
Desktop GIF

பாபநாசமே புரியாத மாரி செல்வராஜுக்கு, தேவர் மகன் புரிந்ததா? விளாசும் கமல் ரசிகர்கள்

தேவர் மகன் படத்தில் வந்த இசக்கி என்ற கேரக்டர் தான் மாமன்னன் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
Devar Magan

மாரி செல்வராஜ் - கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் சாதி வெறியை தூண்டிய படம் தேவர் மகன் தான் என்பது போன்று இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசியது தற்போது கமல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 3-வது படமாக மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார். வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 29-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படத்தில் வந்த இசக்கி என்ற கேரக்டர் தான் மாமன்னன். நான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் இந்த 3 படங்கள் பண்ணுவதற்கு முன்பாகவும் ஒவ்வொரு முறையும் தேவர்மகன் படத்தை பார்த்துதான் திரைக்கதை அமைத்தேன்.

தேவர்மகன் படத்தில் பெரிய தேவர் சின்ன தேவர் என்ற கேரக்டருக்கு இடையில் எனது அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த மாமன்னன் படம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் சாதி வெறியை ஏற்படுத்திய படம் தான் தேவர்மகன் என்பது போல் மாரி செல்வராஜ் பேசியிருந்ததார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே இது தேவர் காலடி மண்ணே என்ற பாடல் வைத்து சாதி பெருமையை வளர்த்துவிட்டதால் இசக்கி போன்ற ஆட்கள் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படம் மாமன்னன் என்று அறிவிக்கப்பட்டதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இதில் ரஜினிகாந்த் பங்கேற்காத நிலையில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரஜினிகாந்த் லால் சலாம் ஷூட்டிங் காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டாலும் படத்தின் சிக்கலை புரிந்துகொண்டு விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கமல்ஹாசனை மாரி செல்வராஜ் மேடையில் வைரத்து அசிங்கப்படுத்திவிட்டதாக கமல்ஹாசன் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இவ்வளவு பேசினாலும் கமல்ஹாசன் கடைசி வரை இன்முகத்துடன் படத்தை பாராட்டி பேசிவிட்டு சென்றதை அவரின் ரசிகர்கள் புகழ்ந்து வரும் நிலையில். மாரி செல்வராஜூன் பேச்சுக்கு எதிராக மீம்களை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றர். இதில் குறிப்பாக தேவர் மகன் என்ற ஒரு படம் மட்டுமே சாதிய மோதலையும் சாதி வெறியையும் தூண்டுவதாக பேசுவது அரவேக்காட்டுத்தமான பேச்சு. நீங்க மாறுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது என்று பரிநேறும் பெருமாள் படத்தினால் எல்லாரும் திருச்திட்டானுங்களா என்ற கேள்வியை கமல் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ் அந்த படத்தில் அப்பா அந்த பெண்ணை பாதுகாக்க மட்டுமே செய்வார். தப்பு பண்ணது அவன் நீ ஏன் பயப்படனும் என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கமல் ரசிகர்கள் அந்த படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் ரீமேக் என்பது கூட மாரி செல்வராஜூக்கு தெரியவில்லையா? ரீமேக் படத்தில் கதையை எப்படி மாற்ற முடியும் என்று ஆரம்பத்தில் இருந்தே கமல் மீதான மாரி செல்வராஜூன் வெறுப்பை விமர்சித்து வருகின்றனர்.  

இதற்கு மீம் பதிவிட்டுள்ள கமல் ரசிகர்கள்  அய்யய்ய.. மாரிக்கு பாபநாசமே புரியாது.. இதுல 30 வருஷத்துக்கு முன்னாடி வந்த தேவர் மகன் திரைப்படம் புரிந்த மாதிரி தான் என்றும் கூறி வருகின்றனர். இப்படி கமல் ரசிகர்களும் மாரி செல்வராஜ் ரசிகர்களும் இணையத்தில் மோதிக்கொள்வது மாமன்னன் படத்திற்கு பெரும் ப்ரமோஷனாக அமைந்துள்ளதாக பொதுவாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment