Tamil Serial Actor Irfan Say About CWC Chance : விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 90-ஸ் கிட்களின் மனதில் முக்கிய இடம்டிபிடித்த இந்த தொடர், கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பானது. 4 சீசன்கள் ஒளிபரப்பான இந்த தொடரின் பலர் புகழ் பெற்ற நிலையில், அதில் முக்கியமானவர் நடிகர் இர்பான். இந்த தொடரில் வினித் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், மெர்க்குரி பூக்கள் என்ற படத்தில் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இவர், அடுத்து கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் கவனிக்கப்படும் வெள்ளித்திரை நடிகராக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் அகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் படத்தில் நடித்திருந்த இவர், விஜய் டிவியின் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி தொடரின் முதல் சீசனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் விஜய் டிவயின் ஹிட் ரியாலிட்டி ஷோவான 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியில் பங்கேற்று 3-வது இடம்பிடித்து அசத்தினார். இந்நிலையில், சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளீர்களா என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 3-வது சீசனில், பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கடந்த வருடம் குக் வித் கோமாலி' நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இப்போது சமையல் தெரியும் என்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் வரவிருக்கும் 'பிக் பாஸ் தமிழ்' நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நுழைகிறீர்ளா என்று கேட்டபோது, "சண்டை மற்றும் மோதல்களில் ஈடுபடுவதற்கு சரியான நபர் நான் அல்ல" என குறிப்பிட்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும், மீண்டும் சந்திக்கும் ரீயூனியன் நடைபெற்றது. இதில் இர்பான் தவிர, நிஷா கணேஷ், கார்த்திக் வாசு, ஸ்வேதா சுப்பிரமணியன், சாய் பிரமோதிதா, ஹரிப்ரியா, கணேஷ் பிரபு மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil