Advertisment

தவறான தொழில் செய்த நடிகர் கைது... சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி? : டாப் 5 சினிமா

இசையமைப்பாளர் மற்றும் நடிரான விஜய் ஆன்டணி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தவறான தொழில் செய்த நடிகர் கைது... சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி? : டாப் 5 சினிமா

தவறான தொழில் செய்த கன்னட நடிகர் கைது

Advertisment

இளம்பெண்கள் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து தவறான செயலி உருவாக்கி இளைஞர்கள் பலரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மஞ்சுநாத் என்ற சஞ்சு கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான நியூரான் என்ற படத்தில் நடித்திருந்தார். இவரின் கைது சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயநினைவை இழந்த நடிகர் விஜய் ஆண்டனி?

இசையமைப்பாளர் மற்றும் நடிரான விஜய் ஆன்டணி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலோசியாவில் உள்ள லங்கா தீவில் நடைபெற்று வந்த நிலையில், படக்கு காட்சி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய விஜய் ஆன்டணி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது சென்னை மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும், இங்கு அவர் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக நெருங்கி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

வாரிசு இயக்குனருக்கு ரசிகர்கள் பதிலடி

சமீபத்தில் வெளியான வாரிசு படம் வசூலை குவித்து வரும் நிலையில், படத்திற்கான விமர்சனங்களும் கடுமையாக வந்துகொண்டிருக்கிறது. இதற்கு பதில் கூறிய படத்தின் இயக்குனர் வம்சி, படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது எத்தனை பேர் அவர்களின் உழைப்பை கொடுக்கிறார்கள் தெரியுமா என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து வரும் நெட்டிசன்கள், எச்.வினோத் மற்றும் லேகேஷ் கனகராஜூடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். நாம் எவ்வளு கஷ்டப்பட்டாலும் கோடியில் சம்பளம் வாங்குகிறோம் ஆனால் கூலி வேலை செய்யும் ரசிகர்கள் உழைப்பு பெரியது என லோகேஷ் கூறியதை மேற்கோள் கட்டி வருகின்றனர்.

மீண்டும் தனுஷூடன் சன் பிச்சர்ஸ் நிறுவனம்

வாத்தி படத்தை முடித்த தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனுஷின் அடுத்த படத்தை சன்.பிச்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இது தனுஷின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகா திருமணம்

முன்னணி நடிகையாக ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபரும் தனது காதலருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது இவர்களின் திருமணம் குறித்த வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. டிஸ்னி+ஹாஸ்டாரில் இந்த வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema Vijay Antony
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment