பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

Tamil News Update : கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.

Kannada Actor Puneeth Rajkumar Passed Away : கன்னட திரையுலகின் முன்னணி நடிரான புனித் ராஜ்குமார்  கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மருத்தவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் இளையமகன் புனித் ராஜ்குமார். கடந்த 1975-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், 1976-ம் ஆண்டு வெளியான பிரேமடே கன்னிகே என்ற படத்தில் குழந்தையாக அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புனித், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான அப்பு படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து மயூரா, ஆகாஷ், அஜய், ஜாக்கி, அண்ணா பாண்ட், பவர், ராண விக்ரமா, ராஜகுமாரா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், தனது அசத்தலான நடனத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கன்னட சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகரான வலம் வந்த புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக இவ்வாண்டு தொடக்கத்தில் யுவரத்னா படம் வெளியானது.

தொடர்ந்து ஜேம்ஸ், டேவிட்வா உள்ளிட்ட 2 படங்களில் பிஸியாக நடித்து வந்த புனித் ராஜ்குமார், பல இயக்குநர்களிடம் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்ற புனித் ராஜ்குமாருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக  பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணம் கன்னட சினிமாவின் பெரும் இழப்பு என்று கூறியுள்ள கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்கு அவரது இழப்பை தாங்கும் சக்தியை வழங்க வேண்டும் என்றும் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil kannada actor puneeth rajkumar passed away

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com