/indian-express-tamil/media/media_files/4MIbTDHPk9G7T5gDn1eL.jpg)
சீரியல் நடிகை ஆர்த்திகா
ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஆர்த்திகா, புதிய படத்தில் நடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். நடிகர் கார்த்திக் ராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், ஆர்த்திகா நாயகியாக நடித்து வருகிறார். கேரளாவின் கோட்டையம் பகுதியை சேர்ந்த இவர், சினிமா பின்னணி இல்லாமல் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இதன் காரணமாக சின்னத்திரையில் என்ட்ரியான இவருக்கு கார்த்திகை தீபம் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக கார்த்திக் ராஜ் நடிப்பில் வெளியான பிளாக் அண்ட் வொயிட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்திகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனிடையே தற்போது ஆர்த்திகா, புதிய படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார். சமூகம் மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வா பகண்டையா என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஆர்த்திகா ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித் கோலி, மும்பை நடிகர் யோகிராம் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
மேலும், படத்தில் ஆர் சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணா, நித்திஷ், வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டாமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில் ஆர்த்திகாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.