எம்.ஜி.ஆர் பாடிய அந்த பாட்டு என்னை மனதில் வைத்து பாடியது; சட்டசபையில் முழங்கிய கருணாநிதி: எந்த பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், திரையில் பாடிய ஒரு பெரிய ஹிட் பாடல் தன்னை மனதில் வைத்து தான் பாடியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி

எம்.ஜி.ஆர், திரையில் பாடிய ஒரு பெரிய ஹிட் பாடல் தன்னை மனதில் வைத்து தான் பாடியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி

author-image
WebDesk
New Update
MGR Karunanithi

தமிழ் சினிமாவில் நாயகனாக முத்திரை பதித்த எம்.ஜி.ஆர், திரையில் பாடிய ஒரு பெரிய ஹிட் பாடல் தன்னை மனதில் வைத்து தான் பாடியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டசபையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த எம்.ஜி.ஆர், சினிமாவில் நடிகர், தாயரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர். இல்லாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்று பெயரெடுத்த எம்.ஜி.ஆர், தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்துள்ளார். சினிமாவில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த எம்.ஜி.ஆருக்கு அவரது பாடல்கள் தான் பெரிய பக்கபலமாக இருந்துள்ளனர். அந்த வகையில் ஒரு பாடல் பற்றி பார்ப்போம்.

1963-ம் ஆண்டு கே.ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பணத்தோட்டம். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, ஷீலா, நம்பியார், அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இதில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தான் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல்.

இந்த பாடல் குறித்து சட்டசபையில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல் பற்றி சொன்னார்கள். அந்த பாடல் அவருக்காக பாடியது அல்ல, அது எனக்காக பாடியது என்பது எனக்கு தெரியும். என்னை மனதில் வைத்து தான் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடியுள்ளார். எனது 40 ஆண்டுகால நண்பராக இருந்தவர். திராவிட முன்னேற்ற கழக, தேர்தலில் தலைவராக நான் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தவர். ஆட்களை சேர்த்து வெற்றி பெற செய்தவர். இந்த நன்றி என்றைக்கும் எனக்கு உண்டு.

Advertisment
Advertisements

அதேபோல் இந்த பொறுப்புக்கு நான் வரவேண்டும் என்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். அவருக்கும் எனக்கும் உள்ள 40 ஆண்டுகால நட்பின் காரணமாக, இந்த பாடலை எவர் எது சொன்னாலும் கூட இப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்ற பாடலில் ஒரு தலைவி இருக்கிறாள் என்று பாடவில்லை. ஒரு தலைவன் என்று என்னைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்று கருணாநிதி பேசியுள்ளார். 

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: