Advertisment

விலகிய நடிகை ரீ-என்டரி... காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்

மீனாட்சி கேரக்டரில் நடிகை சுஜாதா நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வந்தது

author-image
WebDesk
New Update
Katrukenna Veli

காற்றுக்கென்ன வேலி

விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக காற்றுக்கொன்ன வேலி சீரியலில் முக்கிய பிரபலம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் காற்றுக்கொன்ன வேலி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் அடிக்கடி நடிகர் நடிகைகள் மாற்றம் நடப்பது வழக்கமாக உள்ளது.

ஆனாலும் சீரியலின் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால், கேரக்டர் மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதனால் விஜய் டிவியின் டாப் சீரியல்களின் லிஸ்டை எடுத்துக்கொண்டால் அதில் காற்றுக்கென்ன வேலி கட்டாயம் இடம் பெறும். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ஒரு நடிகை மாற்றம் நடந்துள்ளது.

Katrukenna Veli2

சுஜாதா - வீனா வெங்கடேஷ்

அதன்படி இந்த சீரியலில் ஏற்கனவே இந்த சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை வீனா வெங்கடேஷ் விலகியதை தொடர்ந்து மீனாட்சி கேரக்டரில் நடிகை சுஜாதா நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வரும் நிலையில், சமீபத்தில் சுஜாதா அந்த கேரக்டரில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த மீனாட்சி யார் என்பது குறித்தம் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மீனாட்சி கேரக்டரில் நடித்து வந்த நடிகை வீனா வெங்கடேஷ் மீண்டும் மீனாட்சி கேரக்டருக்கு நடிக்க வந்துள்ளார். இதன் மூலம் காற்றுக்கொன்ன வேலி சீரியலில் இருந்து விலகி மீண்டும் அதே சீரியலில் நடிகை வீனா வெங்கடேஷ் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment