scorecardresearch

படிக்காத கணவனை ஏளனம் செய்தாரா மனைவி? ‘நீயா நானா’ கோபிநாத்துக்கு தாமரை ரியாக்ஷன்

கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்!”

படிக்காத கணவனை ஏளனம் செய்தாரா மனைவி? ‘நீயா நானா’ கோபிநாத்துக்கு தாமரை ரியாக்ஷன்

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி தொடர்பான எபிசோட்டில் படிக்காத தனது கணவரை ஏளனமாக பேசிய பெண்ணுக்கு ஆதரவாக பிரபல கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் நடத்துவதில் பிரலமான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் குடும்பம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து இருவேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறது. இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கணவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் மனைவி தொடர்பான எபிசோடு நடைபெற்றது. கணவன்கள் மற்றும மனைவிகள பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், படிக்காத தனது கணவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் மனைவி தனது குழந்தயின் ரேங்கார்டில் கையெழுத்து போடுவது குறித்து பேசப்பட்டது. அப்போது அந்த மனைவி தனது கணவருக்கு படிக்க தெரியாது என்றும் ரேங்க் கார்டை கொடுத்தால் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பார் என்று ஏளனமாக பதில் சொன்னார்.

அதற்கு பதில் பேசிய அந்த தந்தை தான் படிக்கவில்லை என்பதால் தனது மகளை படிக்க வைக்க வேண்டும் என்றும், அதற்கு ஆக வேண்டிய செலவை என் சம்பாத்தியத்தில் நான் கொடுக்க வேண்டும் இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது. எனது மகளின் ஸ்கூல் பீஸ் நான்தான் கட்டுகிறேன். மனைவியை கட்ட விடுவதில்லை. என் மகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறாள். அவள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

ரேங்கார்டை ரொம்ப நேரம் பார்ப்போன். நான் படிக்கும் காலத்தில் 10-க்கு மேல் பதிப்பெண் பெற்றதில்லை ஆனால் என் மகள் 80 -90 மதிப்பெண்கள் வாங்குகிறாள். அதை பார்க்கும்போது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது அதனால் தான் நாள் அந்த ரேங்கார்டை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருப்பபேன் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பதில் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதை கேட்ட தொகுப்பாளர் கோபிநான் அவர் தனக்கு காவிய தந்தையாக தெரிகிறார் என்று கூறி பரிசு வழங்கினார். இந்த எபிசோட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கணவருக்கு ஆதரவாக மனைவியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்த மனைவிக்கு ஆதரவாக கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள பதிவில்,

“அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் ( சொந்த அனுபவம் ). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் – வீட்டிலுள்ள அனைவரிடமும்! 

அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்…இன்னும் பல செய்துகள்… கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும்.

உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து ‘பிராக்ரஸ் ரிப்போர்ட்’டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்!” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், இதற்கும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil kavignar thamari support to neeyaa naana viral wife