scorecardresearch

திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு தங்க பேனா: வீடு தேடி சென்று வழங்கிய வைரமுத்து

மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவரை தங்கை என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Vairamuthu
கவிஞர் வைரமுத்து – மாணவி நந்தினி

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கவிஞர் வைமுத்து தங்க பேனாவை பரிசளித்தார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்ள் தெரிவித்ததோடு அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மாணவி நந்தினியை தனது ஆளுனர் மாளிக்கைக்கு வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இதனிடையே பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு எனக்கு பரிசாக வந்த தங்க பேனாவை பரிசளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாக பரவியது. இதில் திண்டுக்கல் வருகிறேன் தங்க பேனாவை தருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

சொன்னபடியே இன்று மாணவி நந்தினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசாக வழங்கினார். கவிஞர் வைரமுத்துவின் வருகையில் இன்ப அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil kavignar vairamuthu gifted gold pen to state topper student nanthini