மீண்டும் இணைந்த கோலங்கள் டீம்: சீசன் 2 எடுக்க போறாங்களா? வைரல் போட்டோ!

கோலங்கள் சீரியல் நடிகைகள் தேவயானி, நீலிமா ராணி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலங்கள் சீரியல் நடிகைகள் தேவயானி, நீலிமா ராணி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Devayani and Neelima Rani
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோலங்கள் சீரியலில் இணைந்து நடித்த நடிகை தேவயானி மற்றும் நடிகை நீலிமா ராணி இருவரும் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில, இதை பார்த் ரசிகர்கள் கோலங்கள் 2 வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை தேவயானி கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், நடுத்தர குடும்பத்து பெண் தன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து இயக்குனர் திருச்செல்வம் திரைக்கதை அமைத்து சீரியலை இயக்கியிருந்தார்.

தேவயானி, தீபா வெங்கட், நீலிமா ராணி, சத்யபிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த சீரியலில், இயக்குனர் திருச்செல்வம் தொல்காப்பியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் இந்த சீரியலில், அபிநயா என்ற கேரக்டரில் நடித்திருந்த தேவயானி சின்னத்திரையிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார், 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 6 ஆண்டுகள் ஒளிபரப்பானது.

கடந்த 2009-ம் ஆண்டு கோலங்கள் சீரியல் முடிவுக்கு வந்து நிலையில், 15 வருடங்கள் கடந்திருந்தாலும், கோலங்கள் சீரியலுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அப்படியே உள்ள நிலையில், தற்போது இந்த சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதே போல் சமீப காலமாக இந்த சீரியலின் 2-ம் பாகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை

Advertisment
Advertisements

இதனிடையே, கோலங்கள் சீரியலில் நடித்த நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், கோலங்கள் 2 சீரியல் ஷூட்ங்க தொடங்கியாச்சா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கி வரும் புதிய படத்தில் நடிகை தேவயானி நீலிமா ராணி ஆகிய இருவரும் நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Devayani Neelima Rani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: