Advertisment

பாவா லட்சுமணனுக்கு உதவிக் கரம் நீட்டிய விஜய் டி.வி பிரபலம்: 'பேங்க் அக்கவுண்டில் இருந்ததே இவ்வளவுதான்'

அரசு, பாண்டி உள்ளிட்ட படங்களிலும் பாவா லட்சுமணன் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pava Lakshmanan

கலக்கப்போவது யாரு பாலா - பாவா லட்சுமணன்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வரும் பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்த கலக்கப்போவது யாரு பாலா அவருக்கு பண உதவி செய்து நலம் விசாரித்தது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர் பாலா லட்சுமணன். குறிப்பாக மாயி படத்தில் மாயண்ண வந்திருக்காக, என்ற காமெடி பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் ஆனந்தம் படத்தில் மம்முட்டி வீட்டுக்கு திருட வந்து அதே வீட்டில் வேலைக்காரராக மாறி ஒரு குணச்சித்திர நடிகராகவும் அசத்தியிருப்பார்

மேலும் அரசு, பாண்டி உள்ளிட்ட படங்களிலும் பாவா லட்சுமணன் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வரும் அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்ததால் காலி இருந்து கட்டை விரல் அகற்றப்பட்டது.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால், பாவா லட்சுமணன் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னிடம் மருத்து செலவுக்கு கூட பணம் இல்லை என்று அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவருக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை புகழ் கலக்கப்போவது யாரு பாலா அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். மருத்துவமனைக்கு சென்று பாவா லட்சுமணனை நேரில் சந்தித்த பாலா அவருக்கு ரூ 30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் சில நகைச்சுவை கவுண்டர்களை கொடுத்து அவரை மகிழ்வித்த பாலா, உடல்நலம் விசாரித்துள்ளார்.

இதில் தனது அக்கவுண்டில் இருந்ததே 32 ஆயிரம் தான். அந்த பணத்தை எடுத்து 2 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு இங்கு வந்து 30 ஆயிரம் கொடுத்துள்ளதாக பாலா கூறியுள்ளார். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு பாலா கூறியதை தொடர்ந்து பாலா லட்சுமணன் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாலாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment