என்ன அஸ்வின் இப்பிடி பண்ணிட்டீங்க… உதயநிதி படத்தில் இருந்து விலகியது பற்றி விளக்கம்

Cook with comali Aswin opens about his movie with Udhayanidhi Stalin’s red giant movies Tamil News: நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதியின் இயக்கவிருந்த படத்தில் விலகியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்.

Tamil latest serial news: Cook with comali Aswin revealed the reason behind quitting from Udhayanidhi Stalin’s red giant movies production

Tamil latest serial news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அஸ்வின். இவர் ஏற்கனவே அந்த டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்தவர். மேலும் ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆதித்ய வர்மா’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்தும் இருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் அறிமுமாகிய அஸ்வினுக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக தோன்ற வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்காக தன்னை முழுமையாக தயார்ப் படுத்தியும் வருகிறார். அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் 2 படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியும் இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் அஸ்வின் நடிக்க இருந்ததாக கூறப்டுகிறது. இந்த சூழலில், படத்தில் இருந்து தான் விலகுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியது.

இந்த திடீர் விலகல் குறித்து பேசிய அஸ்வின், எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். எனக்கு வெள்ளித்திரையில் வர வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் தான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த படத்தில் அஸ்வினுக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் காளிதாஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸ்ஸில் வெளி வந்த ‘பாவக் கதை’ குறும்படத்தில் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil latest serial news cook with comali aswin revealed the reason behind quitting from udhayanidhi stalins red giant movies production

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com