ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவை தாக்கும் செக்ஸ் புயல், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த்... அடுத்து யார்?

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: சினிமா வாய்ப்புக்காக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு சினிமாதுறையை கலங்க வைத்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவை செக்ஸ் புயல் தாக்க ஆரம்பித்திருக்கிறது. ஆந்திராவை அலற வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீரெட்டி, தமிழகத்தின் பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரை நோக்கி கை காட்டுகிறார்.

ஸ்ரீரெட்டி..  தெலுங்கு திரையுலகை அதிர வைத்த பெயர் இது! பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரை பற்றிய குற்றச்சாட்டுகளை இணையத்தளத்தில் பதிவிட தொடங்கியுள்ளார்.

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவை தாக்கும் புயல், Sri Reddy

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவை தாக்கும் புயல்

ஸ்ரீரெட்டி முன்னதாக தெலுங்கு திரையுலகினர் பற்றிய விவரங்களை பகிர்ந்து வந்தபோது தமிழ் சினிமாவிலும் என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள், பாலியல் ரீதியாக பயன்படுத்தியவர்கள் பற்றி கூறுவேன் என்று தெரிவித்திருந்தார். சொன்ன வார்த்தையை நிரூபிக்கும் வகையில், நேற்று இயக்குனர் முருகதாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்.

ஸ்ரீரெட்டி என்ன சொல்கிறார்?

ஸ்ரீரெட்டி தனது பதிவில், “ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி.. எப்படி இருக்கீங்க? கிரீன் பார்க் ஓட்டல் நினைவிருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் அறிமுகமானோம்.. எனக்கு நடிக்கும் வாய்ப்பு தருவதாக உறுதி அளித்தீர்கள். நமக்குள் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால் இன்னும் சினிமா வாய்ப்பு எனக்கு அளிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

முதலில் முருதாஸ் பற்றி கூறியது பரபரப்பை கிளப்பியது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி பெரிய வெடிகுண்டை போட்டுள்ளார். இதை பார்த்து தமிழ் சினிமா உலகம் அதிர்ந்துள்ளது.

“5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் பார்க் ஓட்டலில் நடந்த செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் பார்ட்டியில் என்னை சந்தித்தது ஞாபகம் உள்ளதா? நீங்கள் என்னை பயன்படுத்தினீர்கள். இருவரும் கிளப்பில் நடனமாடியபோது எனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி அளித்தது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டிருந்தார்.

மேலும், “என் வாழ்க்கையில் நடந்த ரகசியங்களை நான் பகிர்ந்தபோது எனக்கு ஆறுதலாக, ஆதரவாக மற்றும் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலகிற்கான நேரம்.” என்று அதிரடியாய் முடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகை ஒரு உலுக்கு உலுக்கிய ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டு புயல் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரை நோக்கி கை நீட்டிய ஸ்ரீரெட்டி, இன்னும் யார், யார் பெயரை இழுத்து விடப் போகிறாரோ? என கோலிவுட் பதறிப் போயிருக்கிறது.

×Close
×Close