தமிழ் சினிமாவில் பன்முக திறமையுடன் வலம் வந்த கவியரசு கண்ணதாசன், முதலில் 2 திருமணங்கள் செய்துவிட்ட நிலையில், தனது மகளை விட வயதில் குறைந்த கல்லூரி மாணவி ஒருவரை 3-வது திருமணம் செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்தவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் கண்ணதாசன், தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், அவர் தனது கம்பெனிக்கு வந்து பாடல் எழுத வேண்டும் என்று கூறி, பல கார்கள் வந்து நிற்கும் சூழலும் இருந்தது. பாடல் மட்டுமல்லாமல், கவிதை, புத்தகம், கட்டுரை என எழுதியுள்ள கண்ணதாசன், சினிமாவில் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்பதை ஆசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார். தனது வாழ்நாளின் இறுதிவரை கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்துள்ளார்
தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை 1950-ம் ஆண்டு பொன்னழகி பார்வதி என இருவரை திருமணம் செய்துகொண்ட கண்ணதாசன், 14 குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த நிலையில், அவர் எழுதிய ஒரு கவிதையை படித்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த கவிதையில் நீங்கள் பெண்களை இழிவாக பேசியுள்ளீர்கள். இது தவறு என்று கண்ணதாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை பார்த்த கண்ணதாசன், அதில் அவர் பெயர் வள்ளியம்மை என்று இருக்க, நீங்கள் செட்டியார் வீட்டு பெண் என்று நினைக்கிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.
Advertisment
Advertisements
என்னை பற்றி பேச வேண்டாம். நீங்கள் பெண்களை இழிவாக நினைத்து கவிதைகளை எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் தமிழ் புலமையை பார்த்து வியந்த கண்ணதாசன், அவரை சந்திக்க கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரியில் வள்ளியம்மையை பார்த்த கண்ணதாசன், அவரின் தமிழ் புலமையை பார்த்து வியந்து நீங்கள் என் வாழ்க்கை துணையாக வந்தால் சரியாக இருக்கும் என்று சொல்ல, நான் உங்கள் பொண்ணு மாதிரி என்று சொல்ல, அப்படியெல்லாம் சொல்லாது என்னுடன் சேர்ந்து உங்கள் தமிழ் புலமை செயல்படும் என்ற நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு கண்ணதாசன் வள்ளியம்மையை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் நடக்கும்போது கண்ணதாசனுக்கு வயது 48. வள்ளியமைக்கு வயது 24. இருவருக்கும் இடையே 24 வயது வித்தியாசம் என்றாலும், இருவர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு, விசாலி கண்ணதாசன் என்று ஒரு மகள் இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“