பெண்களே... எப்போமே பாசிட்டீவா இருக்கணுமா? இந்த கலர் சேலை கட்டுங்க: ராசிப்பலன் வாசிப்பாளர் சொன்ன தகவல்

சில சமயங்களில், பெண்கள், தங்களின் மகிழ்ச்சி , சோகம், எதிர்பார்ப்பு ஆகிய உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

சில சமயங்களில், பெண்கள், தங்களின் மகிழ்ச்சி , சோகம், எதிர்பார்ப்பு ஆகிய உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Vishal Sundar

பொதுவாக பெண்கள் தங்கள் அணியும் உடைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குடும்பத்துடன் வெளியில் செல்லும்போதும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லும்போதும், அலுவலகத்திற்கு போகும்போதும் மற்றவர்களை விடவும் தான் தனியாக தெரிய வேண்டும் என்பது பல பெண்களின் முக்கிய நினைவாக உள்ளது. இதற்காக தங்கள் உடைகளை அதிகமான நேரம் ஒதுக்கி தேர்வு செய்வார்கள். இப்படி தேர்வு செய்யும் உடைகள் அனைத்தும் உண்மையில், அவர்களுக்கு திருப்தியை கொடுக்குமா என்றால், பலரின் பதில் இல்லை என்பது தான்.

Advertisment

அதேபோல் எவ்வளவு தான் ஒரு உடையை ஆசை ஆசையாக தேர்வு செய்து பலமுறை அணிந்தாலும், அதைவிட புதிய ட்ரெண்டிங்கில் வரும் மற்றொரு உடை கிடைக்கும்போது, பழைய உடைக்கு பெண்கள் மதிப்பு கொடுப்பது குறைவாகத்தான் இருக்கும். சில சமயங்களில், தங்களின் மனநிலையை உணர்த்தும் வகையிலும் பெண்கள் உடை அணிவார்கள். தங்கள், மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, எதிர்பார்ப்புடனோ இருக்கும்போது அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலான கலரில் உடை அணியும் வழக்கமும் இருக்கிறது.

அந்த வகையில் பெண்கள் எப்போதும் பாசிட்டீவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்று, தனியார் தொலைக்காட்சியில் ராசிபலன் வாசிப்பதன் மூலம் பிரபலமான விசாலாட்சி வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் பேசிய அவர், இணையதளங்களில் எங்கு தேடினாலும், தம்னிலில் இந்த மஞ்சள் கலர் சேலை வரும். இது என் இதயத்திற்கு நெருக்கமான சேலை. ஜமக்கி வைத்த இந்த சேலை, மனதில் எந்த கஷ்டம் இருந்தாலும், மகிழ்ச்சியை கொடுக்கும்.

வீட்டு டென்ஷன், ஆபீஸ் கவலை என எது இருந்தாலும், இந்த சேலை எடுத்து கட்டினால் ஃபுல் ப்ரைட் ஆகிவிடுவேன். இந்த சேலை கட்டினால், டென்ஷனில் இருந்து வெளியில் வர வேறு எதுவுமே செய்ய வேண்டாம். இந்த சேலை ரொம்ப பாசிட்டீவ். எல்லா வீடியோக்களையும் அழித்துவிட்டார்கள். ஆனால் இந்த சேலை கட்டிய தம்னில் மட்டும் இன்றும் வலைதளங்களில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. இதற்காக தனியாக பிளவுஸ் இல்லாமல், இதிலே வரும் ப்ளவுசை கட்டிக்கொள்வேன்.

Advertisment
Advertisements

அதே சமயம், ஸ்பான்சர்கள் சேலை கொடுத்தால் அதில் இருந்து பிளவுஸ் கிழிக்க முடியாது. அதனால் அனைத்து கலருக்கும் ஏற்றபடி 10 பிளவுஸ் ரெடிமேடாக வைத்துக்கொண்டு, இந்த மாதிரி நேரங்களில் பயன்படுத்துவேன். இந்த சேலை 25 ஆண்டுகள் பழமையானது. முதல்முறையாக ராசிபலன் நிகழ்ச்சியில் தான் இதை கட்டினேன். அதனால் இது என் பேவரெட், ரொம்ப மூட்அவுட்டில் இருந்தால் இதை கட்டிக்கொள்வேன். எனக்கு பிரைட் அல்லது ட்ரார்க் கலர்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: