scorecardresearch

கோடிக் கணக்கில் அல்ல… மில்லியன் நன்றிகள்… லோகேஷ் கனகராஜ் வைரல் பதிவு

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கோடிக் கணக்கில் அல்ல… மில்லியன் நன்றிகள்… லோகேஷ் கனகராஜ் வைரல் பதிவு

இயக்குனர் மிஷ்கினுடன் லியோ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிஷ்கினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். 4 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் லோகேஷ் கொண்டுவந்த கைதி யூனிவர்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் அடுத்த பாகங்கள் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ் கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வருகிறார்.

காஷ்மீரில் லியோ படப்பிடிப்பை முடித்து திரும்பிய இயக்குனர் மிஷ்கின், படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் இயக்கத்தை பாராட்டி அவருக்கு நெற்றியில் முத்தமிட்டேன். அவர் ஒரு ராணுவ ஜெனரலை போல் அனைவரையும் சரியாக கட்டுப்படுத்துகிறார் இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று கூறியிருந்தார்.

நான் இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். 500 உறுப்பினர்களைக் கொண்ட ‘லியோ’ குழு -12 டிகிரி செல்சியஸில் படப்பிடிப்பு நடக்கிறது. நான் எனது பகுதி படப்பிடிப்பை முடிக்க வேலை செய்த ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவ் அதிரடியாக ஒரு ஆக்‌ஷன் காட்சியை அமைத்துள்ளார். உதவி இயக்குனர்கள் என் மீது பொழிந்த கடின உழைப்பையும் அன்பையும் கண்டு வியந்தேன். அந்த குளிர் காலத்திலும் தயாரிப்பாளர் லலித் சக தொழிலாளியாக பணியாற்றினார்.

ஒரு அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளரைப் போல, லோகேஷ் கனகராஜ் ஒரு போர்வீரனைப் போல ஒரே சிந்தனையுடன், கனிவாகவும், கண்டிப்பாகவும் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனது கடைசி காட்சிக்குப் பிறகு, அவர் என்னைக் கட்டிப்பிடித்தார், நான் அவரது நெற்றியில் முத்தமிட்டேன்.

“எனது அன்புச் சகோதரர் விஜய்யுடன் நடிகராக பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என் மீதான அன்பையும், பணிவையும் என்னால் மறக்க முடியாது. ‘லியோ’ படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே தற்போது மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,, “மை டியர் மிஷ்கின் சார், உங்களுடன் இவ்வளவு நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த கோடி நன்றிகள் போதாது. நீங்கள் இந்த படத்தில் இணைந்தது எங்களுக்கு முழு திருப்தி சார். நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான நன்றி சொல்ல முடியாது, ஆனால் ஒரு மில்லியன் நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil lokesh kanagaraj pens gratitude note to mysskin for his work in leo