ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் செவித்திறனை வழங்கி நெகழ்ச்சியை ஏற்படுத்திய மலையாள நடிகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளிளே பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில தகுந்த அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த கோவையை சேர்ந்த மலையாள நடிகர் பிரதீப் ஜோஸ் அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் காமராஜரின் 121"வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் செவித்திறன் கருவி, உதவித்தொகையை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மலையாள நடிகரான இவரது இந்த செயல் கோவை மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“