என்றும் இளமை இதுதானோ… குருப் போட்டோவில் மாஸ் காட்டும் நடிகர் மம்முட்டி

Tamil Cinema Update : மலையாள நடிகர் மம்முட்டி தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Mammootty Viral Photo Update : மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்முட்டி தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் கடந்த 1971 தனது 20-வது வயதில், அனுபவங்கள் பாலிச்சக்கல் என்ற படத்தில் ஜூனியர் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 1973-ல் காலச்சக்கரம் என்ற படத்தில் போட்மேனாக நடித்த இவர், அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் தனது படிப்பை முடித்துள்ளார்.

அதன்பிறகு 1980-ம் ஆண்டு விக்கணுன்டு சொப்னங்கள் என்ற படத்தில் மாதவன் குட்டி என்ற கேரக்டரில் நடித்தார். முகமது குட்டி இஸ்மாயில் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு மம்முட்டி என்ற பெயரே பெரிய அடையாளமாக மாறிவிட்டது. தொடர்ந்து பல படங்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட் மம்முட்டி மலையாள சினிமாவின் மற்றொரு அடையாளமான மோகன்லாலுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான சிபிஐ சீரியல் படங்கள் இநதிய அளவில் பெரும் பிரபலம். இந்த படத்தில் 5-வது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக ஒரு படத்திற்கு 5-வது பாகம் வெளியான இருப்பது இதுவே முதல்முறையாகும்.  தனது நடிப்புக்காக 4 முறை தேசிய விருது வாங்கியுள்ள மம்முட்டி, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தடம் பதித்த மம்முட்டி,தமிழில் மவுனம் சம்மதம், அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் பேரன்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்துமே மம்மூட்டிக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. சமீபத்தில் மம்முட்டி நடித்த மாமாங்கம் திரைப்படம் தமிழிலும் வெளியிடப்பட்டது. தமிழில் கடைசியாக ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்திருந்தார் மம்முட்டி. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது,

இந்நிலையில் மம்முட்டி சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டிருந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது அயராது உழைப்பினால் தற்போது முன்னணி நட்சத்திரமாக உளர்ந்துள்ள மம்முட்டி அவ்வப்போது தனது நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். 80-90 களில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் இதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் மம்முட்டி தனது நண்பர்களை சந்தித்துள்ளார். சமீபத்தில் மம்முட்டி படித்த கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், மம்முட்டி தனது கல்லூரி நண்பர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனது நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள அனைவரும் வயதானவர்காக தெரிந்தாலும் ஒருவர் மட்டும் மிகவும் இளமையாக தெரிகிறார். அவர்தான் மம்முட்டி. தற்போது 71 வயதை கடந்துள்ள மம்முட்டி, இந்த வயதிற்கான அறிகுறியே இல்லாமல் தனது சமகால நண்பர்கள் மத்தியில் இளமையாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்றும் இளமை இவருக்குதான் பொருந்தும். என்று கூறி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil malayalam cinema actor mammootty photo going on viral update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com