scorecardresearch

ரஜினி படத்தில் நடித்த பிறகு என் மார்க்கெட் வீழ்ச்சி: மனிஷா கொய்ராலா

ரஜினிகாந்த் ஜோடியாக தான் நடித்த பாபா திரைப்படம் தென்னிந்திய திரையுலகில் தனது சினிமா வாழ்க்கையை முடித்துவிட்டதாக மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

Rajinikanth Manisha
ரஜினிகாந்த் – மணிஷா கொய்ராலா

பாபா படத்தின் தோல்வி தென்னிந்திய சினிமாவில் எனது வாழக்கையை முடித்துவிட்டது என்று அப்படத்தின் நாயகி மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்தவர் மணிஷா கொய்ராலா. 1991-ம் ஆண்டு வெளியான சௌதகர் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து வந்தார். 1994-ம் ஆண்டு கிரிமினல் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மணிஷா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2002-ம் ஆண்டு வெளியான ரஜினியின் பாபா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. பாபா படத்தின் தோல்விதான் தனது தென்னிந்திய சினிமா வாழ்க்கையை முடக்கியது என்று தற்போது மணிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் O2 இந்தியா என்ற யூடியூப் சேனலில் பேசிய மணிஷா கொய்ராலா கூறுகையில்,“பாபா எனது கடைசி பெரிய தமிழ் படமாக இருக்கலாம். அந்த நாட்களில் பாபா மிக மோசமாக தோல்வியை சந்தித்து. இந்த தோல்வி எனக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன, ஆனால் படம் தோல்வியை சந்தித்தபோது, தென்னிந்திய படங்களில் எனது வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது என்று நினைத்தேன். அதே மாதிரிதான் நடந்தது.

பாபா படத்தில் நடிப்பதற்கு முன், பல தென்னிந்தியத் படங்களை கைவசம் வைத்திருந்தேன். ஆனால் பாபா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி காரணமாக எனக்கு குறைவான வாய்ப்புகள் கிடைத்தது பாபா தோல்வியடைந்த பிறகு, எனக்கு சலுகைகள் கிடைப்பதை நான் விரும்பவில்லை. வித்தியாசமான இந்த, படம் மீண்டும் வெளியிடப்பட்டபோது அது கேள்விப்படாத வெற்றியாக மாறியது. ரஜினி சார் ஒரு போதும் தோல்வியை கொடுக்க முடியாது. அவருடன் பணியாற்றுவதற்கு மிகவும் அன்பான மனிதர்,” என்று மணிஷா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்தநாளில் பாபா மீண்டும் வெளியிடப்பட்டது. ரீ-ரிலீசில் பாபா படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் பெற்றதாக தகவல்கள் வெளியானது. பாபா ரஜினிகாந்திற்கு ஒரு முக்கிய படமாக இருந்தது, பாக்ஸ்ஆபீசில் இந்த படம் தோல்வியை சந்தித்த போதிலும், அவர் இந்த படத்தை மிகவும் விரும்புவதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் பாபா படத்தின் நாயகன் மட்டுமல்லாமல் அதன் தயாரிப்பாளராகவும் இருந்து படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியவர். படத்தின் கதைக்களம் நாத்திகராக இருக்கும் ஒரு இளைஞனைச் சுற்றி வருகிறது, பின்னர் அவர் உண்மையில் ஒரு இமயமலை துறவியின் மறு அவதாரம் என்பதைக் கண்டுபிடிப்பார்.

பாபா படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்த மணிஷா கொய்ராலா, கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் மணிஷா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil manisha koirala says rajinikanth cult film baba finished her career in south films